×

திரைக்கதை இயற்றுவதில் அவரை மிஞ்ச எவரும் இல்லை..! - இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு வானதி சீனிவாசன் புகழஞ்சலி!

 

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரைக்கதை இயற்றுவதில் பாக்யராஜ் அவர்களை மிஞ்சும் அளவுக்கு எவரும் இல்லை என்று கூறும் வகையில் தனது படைப்புகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர். 

அவரை இழந்து வாடும் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன்.