☰
×

இனி குறைகளை தெரிவிக்க அலைச்சலுக்கு இடமில்லை: ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் உதவி எண்கள் அறிவிப்பு..!!

 

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிக்கை:

தமிழக முதல்வர் விஜய்யின் நல்லாசியுடன், என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெறச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் நலனுக்காகவும், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்றுச் செயல்படுத்தவும் எனது பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இணையதளம்: https://tvkramesh.in/

இந்த இணையதளத்தின் வாயிலாகப் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்களது புகார்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை எளிதாகப் பதிவு செய்யலாம்.

தங்களது மனுக்கள் மீதான நடவடிக்கைகளின் நிலையை அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண்கள்:98430 88410, 86810 88410

இந்த எண்கள் வாயிலாகவும் ஸ்ரீரங்கம் தொகுதி பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கைகளை உரிய ஆதாரங்களுடன் எனது அலுவலகத்திற்குத் தெரிவிக்கலாம்.

அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலான தொடர்பை எளிமைப்படுத்தி, மக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண்பதற்கான ஒரு பயனுள்ள தளமாக இந்த இணையதளம் அமையும். மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம்.

மக்களின் குறைகளைத் தீர்ப்போம்.

மக்கள் சேவையில் தொடர்ந்து பயணிப்போம்.

வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.