×

திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை

 

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அக்டோபர்) என்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று பரவலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. ருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 17 செமீ, ஆவடி 12 செமீ, திருவாலங்காடு 11 செமீ, கும்மிடிப்பூண்டி 9 செமீ, பொன்னேரி 8 செமீ, பூண்டி, பள்ளிப்பட்டு தலா 7 செமீ, செங்குன்றம், சோழவரம் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக புழல் ஏரிக்கு நேற்று 72 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 860 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2745 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 18.67 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.