☰
×

குற்றவாளிகளுக்கு பயமில்லை; தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை” - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

 

சென்னையை சேர்ந்தவர் மைத்ரேயன் (வயது 21). ரவுடியான இவர், மயிலாப்பூர் சரித்திர பதி வேடு குற்றவாளி ஆவார். சமீபத்தில் மயிலாப்பூர் போலீசார் இவரை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 21-ந்தேதி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் மைத்ரேயன் வெளியே வந்தார். 22-ந்தேதி முதல் தினமும் காலை 10.30 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை மைத்ரேயன் தனது தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் சென்று மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் அவர், திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் அடையார் இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. அவர்கள் வேணுகோபால் கண்முன்பே அவரது மகன் மைத்ரேயனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அடையார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மைத்ரேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், ஜீவா, அசாருதீன் ஆகிய 2 பேர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை டேக் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- “சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை. இதைப் பற்றி எல்லாம் முதல்-அமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.