கூட்டணி இல்லை.. தனித்து போட்டி! இன்று வெளியாகிறது த.வெ.க-வின் முழு வேட்பாளர் பட்டியல்..!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம், த.வெ.க-வின் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி தேர்தல் களம் தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23ம் தேதியே கடைசி நாளாகும். புதுச்சேரியில் த.வெ.க ஏற்படுத்த போகும் தாக்கமும், அங்கு அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகளின் சதவீதமும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான நேரடி முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டமன்றத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் யாருடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட உள்ளது. நடிகர் விஜய்யின் கட்சி சந்திக்கும் முதல் பெரிய தேர்தல் இது என்பதால், மக்களிடம் நேரடியான ஆதரவை பெறும் நோக்கில் இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரவிருக்கும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தனித்துகளம் காணும் த.வெ.க, தனது முழுமையான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.