கொள்கை, லட்சியம் எதுவும் தெரியாமல் வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறது; உதயநிதி ஸ்டாலின்..!!
Feb 7, 2026, 20:53 IST
விருதுநகரில் இன்று திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், கொள்கை, லட்சியம் எதுவும் தெரியாமல் வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டிருகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் கிடையாது.
திமுக தலைவர் கூறும் எந்த விஷயத்தையும் உடனடியாக களத்தில் இறங்கி செய்துமுடிக்கும் சாமர்த்தியமும் திமுக இளைஞரணிக்கு உள்ளது.
அரசியல் அறிவே இல்லாத சில அட்டைகள் என்னதான் உளறினாலும், புலம்பினாலும் களத்தில் திமுக தான் வெற்றிபெறும் என்றார்.