“இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் எம்.எல்.ஏக்கள்”
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வென்ற இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் எனதவெக ஐடி விங் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வென்ற இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்! பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதி எனத் தந்தை பெரியாரின் கொள்கைப் பாதையில் பயணிக்கும் வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு ,பெண்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யும் உன்னதச் செயலைச் செவ்வனே ஆற்றி வருகிறது.
பெரியாரின் பெயரை வெறும் பெயரளவில் சொல்லிக்கொண்டு, ஆபாச அரசியலை அடிநாதமாகக் கொண்ட கட்சிகளுக்கு மத்தியில், பெண்களின் மரியாதையையும் மாண்பையும் பாதுகாப்பதில் தவெகவின் பாங்கும் பங்கும் அளப்பரியது. கொள்கை என்பது வெறும் சொல் அல்ல; செயல்! அந்தக் கொள்கைப் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியே வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்!” எனக் குறிப்பிட்டுள்ளனர்.