இந்த மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
வங்கிகளில் விடுமுறை நாட்களின் விபரம்:
ஆகஸ்ட் 2, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
ஆகஸ்ட் 4, 2026: கெர் பூஜா என்ற பண்டிகையின் காரணமாக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 8, 2026: சிக்கிமில் கொண்டாடப்படும் "டெண்டோங் லோ ரம் ஃபாட்" எனும் பண்டிகைக்காக அங்குள்ள வங்கிகள் ஆகஸ்ட் 8 அன்று மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்டு 9, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஆகஸ்ட் 13, 2026: தேசபக்தர்கள் தினத்தை முன்னிட்டு மணிப்பூரில் உள்ள வங்கிகளுக்கு அன்று விடுமுறை.
ஆகஸ்ட் 15, 2026: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்டு 16, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
ஆகஸ்ட் 19, 2026: மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளுக்காக திரிபுரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 22, 2026: இது ஆகஸ்ட் மாதத்தில் வரும் 4-வது சனிக்கிழமை. அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 23, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஆகஸ்ட் 25, 2026: மிலாடி நபி, முதல் ஓணம், முஹம்மது நபியின் பிறந்தநாள் போன்றவற்றுக்காக கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 26, 2026: கேரளாவில் ஐத்-இ-மிலாத், பரவாஃபத், திருவோணம் போன்ற பண்டிகைகளுக்காக அங்குள்ள வங்கிகளுக்கு விடுமுறை. ஒரு சில மாநிலங்களில் மிலாடி நபி ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலுங்கானா, மணிப்பூர், ஜம்மு & ஸ்ரீநகர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், புது தில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 28, 2026: ஈத்-இ-மிலாத்-உல்-நபி, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, அய்யன்காளி ஜெயந்தி, ரக்ஷா பந்தன், பாங்-லாப்சோல் போன்ற பண்டிகளுக்காக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், கேரளா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 30, 2026: ஞாயிற்றுக்கிழமைக்காக வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தந்த வங்கியின் நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தலாம்.