×

‘முதல்வர் ஓபிஎஸ் தான்’ போஸ்டருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. தேனி அதிமுக செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஆயத்தமாகி வருகின்றன. திமுகவில் முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிமுகவிலோ எடப்பாடியா அல்லது ஓ.பன்னீர் செல்வமா என குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த தேர்தலில் முதல்வர் பதவிக்கு நிற்க வேண்டும் என நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுகவினர், அவருக்கு ஆதரவு திரட்டினர். இச்சம்பவம் அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை
 

அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஆயத்தமாகி வருகின்றன. திமுகவில் முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிமுகவிலோ எடப்பாடியா அல்லது ஓ.பன்னீர் செல்வமா என குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த தேர்தலில் முதல்வர் பதவிக்கு நிற்க வேண்டும் என நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுகவினர், அவருக்கு ஆதரவு திரட்டினர். இச்சம்பவம் அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை தேனி மாவட்டம் போடியில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ் தான்’ என போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது.

அந்த போஸ்டர்களில், அம்மா ஆசி பெற்றவர் ஓபிஎஸ் தான் என்பதால் அவர் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை அதிமுகவினர் தான் ஒட்டியுள்ளார்கள் என கூறப்படுது. ஆனால், யார் இதனை செய்தது என தெளிவாக தெரியவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் போஸ்டர்கள் குறித்து தேனி மாவட்ட அதிமுக செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அந்த போஸ்டருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.