×

மின்சார துறையில் ஹார்ட் டிஸ்க் திருட்டு..!!முக்கிய ஆவணங்கள் மிஸ்ஸிங்..??

 

சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

காணாமல் போனதில் நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கியவை இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மே 16,17ல் அலுவலகத்தில் குறைந்த பணியாளர்களே இருந்த போது திருட்டு நடந்திருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.