×

அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறப்பா? மத்திய அரசு விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சூழலிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், பயணிகள்,மால்கள், பூங்காக்கள் என அனைத்தும் செயல்பட அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கவில்லை. திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ஏசியுடன் செயல்பட்டால் கொரோனா பரவ அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசு காரணம் காட்டியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இத்திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் முன்னெடுத்து
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சூழலிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், பயணிகள்,மால்கள், பூங்காக்கள் என அனைத்தும் செயல்பட அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கவில்லை. திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ஏசியுடன் செயல்பட்டால் கொரோனா பரவ அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசு காரணம் காட்டியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இத்திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் உறுதியாக கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.