×

தவெக கொடியுடன் பைக் சாகசம் செய்த இளைஞர்! தட்டி தூக்கிய காவல்துறை

 

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் விஜய்யின் கட்சி கொடியினை இருசக்கர வாகனத்தில் கட்டி கொண்டு சாகசம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகத்தை நடிகர் விஜய் தொடங்கி அதற்கான கட்சி கொடி மற்றும் சின்னத்தை அறிமுகபடுத்தி முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த திட்டமிடபட்டு அதற்கான அனுமதியையும் காவல் துறையினரிடம் பெற்றுள்ளார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் விஜய்யின் கட்சி கொடி சின்னத்தை பல்வேறு இடங்களில் ஏற்றியும் சுவர் விளம்பரம் செய்தும் வருகின்றனர்.

இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிற நிலையில் விழுப்புரம் போலீசார் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்