உலகமே மாறப்போகிறது! - உலகை உலுக்கும் பாபா வாங்காவின் கணிப்புகள்!
உலகின் பல நாடுகளில் தற்போது போர் சூழல் நிலவுவதால் அவரது எதிர்காலம் பற்றிய கணிப்புகள் வைரலாகி வருகிறது. அதில் பல கணிப்புகள் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. உலகை அச்சுறுத்தும் பாபா வாங்காவின் கணிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாபா வாங்கா கணிப்பு படி, தொடர்ச்சியான போர்களால் எதிர்காலத்தில் பொருளாதார நிலையற்ற தன்மையும் உலகை அச்சுறுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான நாடுகளில் நிலவும் வங்கித் துறை சார்ந்த அழுத்தங்கள், நாணயங்களின் வீழ்ச்சி, பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் சார்ந்த நெருக்கடிகள் உள்ளிட்ட தற்போதைய நிதிச் சிக்கல்களை பாபா வாங்காவே முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 2025-ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடி வரும் காலத்தில் உச்சத்தைத் தொடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
பாபா வங்காவின் கணிப்புப்படி 2026 ஆம் ஆண்டில் உலக நாடுகள் மிகப்பெரிய பண நெருக்கடியை சந்திக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் குழப்பம் நிலவும் என்றும், வங்கி அமைப்புகளின் பலவீனம் காரணமாக மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்றும், உலகளாவிய கடன் சுமை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
2026ல் AI மூலமாக மனித உறவுகளுக்கு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மனிதர்களின் வாழ்க்கையையும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவுக்கு AI வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளார்.
கடந்த ஆண்டை போலவே வரும் 2026-ம் ஆண்டிலும் மாபெரும் இயற்கை பேரழிவுகள், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் என்றும் அந்த பேரழிவால் 7-8 சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்றும் கணித்துள்ளார்.
2026-ம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வரும் என்று இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்
2026-ம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து ‘உலகின் அதிபதி’ என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவெடுப்பார் எனக் கணித்துள்ளார்..
கடலுக்கு கீழே பெரிய நகரம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் பாபா வாங்காவின் மற்றொரு அச்சுறுத்தும் கணிப்பாகும். சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், வெள்ளப்பெருக்கு மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் குறித்து பாபா வங்கா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. பூமியின் நிலப்பரப்பில் கணிசமான பகுதி இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று அவரது கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. புவி வெப்பமடைதல் தீவிரமடைவதால் இந்த கணிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் பொழுது முதலீட்டாளர்கள் உலோகங்களை தேடி ஓடுவார்கள் என்றும், உலோகங்களை பாதுகாப்பான முதலீடுகளாக அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று கூறியுள்ள பாபா வங்கா, வெள்ளி மற்றும் செம்பு தங்கத்திற்கு இணையான அளவு முக்கியத்துவம் பெறும் என கணித்துள்ளார். மேலும் செம்பின் தேவை அதிகரிப்பதால் செம்பு, ‘புதிய தங்கம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு மதிப்பு பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
பாபா வங்காவின் ஒரு தீர்க்கதரிசனம், கிரெம்ளின் குறித்தும் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இந்த கணிப்பின்படி, விளாடிமிர் புதினின் 'வீழ்ச்சியையும்', உலக அரசியலை மறுவடிவமைக்கக்கூடிய ஒரு புதிய ரஷ்யத் தலைவரின் எழுச்சியையும் அவர் கணித்துள்ளார். அவரது கணிப்பு படி ரஷ்யாவின் புதிய தலைவர் உலகளாவிய தலைவராக மாறுவார் என்று கூறப்படுகிறது.
பாபா வாங்காவின் இந்த கணிப்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படிப்பட்ட உலகளாவிய தலைவராக இருப்பார் என்பதைப் பொறுத்தே உலகின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். சில சமூக ஊடகப் பயனர்கள், ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிப்பதற்காக உக்ரைன் மேற்கொண்ட நீண்ட, கடினமான முயற்சியுடன் இந்தத் தீர்க்கதரிசனத்தைத் தொடர்புபடுத்துகின்றனர். ரஷ்யா சந்திக்கும் ஒரு கடுமையான இராணுவ அல்லது அரசியல் பின்னடைவு உயர் மட்டத்தில் ஒரு மாற்றத்தைத் தூண்டக்கூடும்
உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பதற்றங்கள், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டிகள் ஆகியவை உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்றும், 2026 இல் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், நில நடுக்கங்கள், இயற்கை சீற்றங்கள் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காரணமாக வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும், பொருளாதார முறைகள் கடும் மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.