×

எந்த மண்டலத்திற்கு எவ்வளவு தடுப்பூசி!

மத்திய அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை தமிழகம் முழுவதும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் இருந்து 10 மண்டல சேமிப்பு கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. பத்து மண்டலத்தில் இருந்து 45 சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பின் தமிழகம் முழுவதும் உள்ள 2,704 குளிர்பதன தொடர் நிலைய மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்து மட்டுமே வந்துள்ளது.கோவேக்சின் வரவில்லை. 5,36,500
 

மத்திய அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை தமிழகம் முழுவதும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் இருந்து 10 மண்டல சேமிப்பு கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. பத்து மண்டலத்தில் இருந்து 45 சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பின் தமிழகம் முழுவதும் உள்ள 2,704 குளிர்பதன தொடர் நிலைய மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்து மட்டுமே வந்துள்ளது.கோவேக்சின் வரவில்லை. 5,36,500 டோஸ் கோவிஷீல்டு மட்டுமே புனேவிலிருந்து வந்துள்ளது.

சென்னை மண்டலத்திற்கு 1 லட்சத்து 18 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளும், கடலூர் மண்டலத்திற்கு 25,500 மருந்துகளும், திருச்சிக்கு 40,200 மருந்துகளும், தஞ்சை மண்டலத்திற்கு 28,600 மருந்துகளும், மதுரைக்கு 54,100 மருந்துகளும், சிவகங்கை மண்டலத்திற்கு 19,000 மருந்துகளும், நெல்லைக்கு 51,700மருந்துகளும், வேலூருக்கு 42,100 மருந்துகளும், சேலத்திற்கு 59,800 மருந்துகளும், கோவைக்கு 73,200மருந்துகளும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் காவல்துறையினர், பேரிடர் மீட்பு, ஊர்காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறையினர் கோவின் செயலியில் தங்கள் துறை தலைமை வாயிலாக ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்.