×

கணவனை காணவில்லை என்று புகார் கொடுத்த மனைவியும் காணவில்லை- விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கணவனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து இருந்த மனைவியும் காணாமல் போன தால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போதுதான் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளது தெரியவந்தது. பின்னர் கணவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரத்தில் வசித்து வந்தவர் அன்பழகன். ஓவிய ஆசிரியரான அன்பழகன் சென்னை அண்ணாநகரில்
 

கணவனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து இருந்த மனைவியும் காணாமல் போன தால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போதுதான் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளது தெரியவந்தது. பின்னர் கணவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரத்தில் வசித்து வந்தவர் அன்பழகன். ஓவிய ஆசிரியரான அன்பழகன் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை என்று சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார் ஷோபனா.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் மாயமானது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர் . அப்போது கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஷோபனாவும் திடீரென்று காணாமல் போனதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், சோபனா கூடியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தர்மராஜனுக்கும் ஷோபனாவுக்கும் கள்ள உறவு இருந்தது என்பதும் அவருடன் ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்தது . இதை அடுத்து போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்த தர்மராஜை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது தானும் ஷோபனாவும் உல்லாசமாக இருந்ததை அன்பழகன் நேருக்கு நேராக பார்த்து விட்டார்.

இதனால் வேறு வழியின்றி அவரை அடித்து கொன்று விட்டோம். பின்னர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி அவரை புதைத்து விட்டோம் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து தர்மராஜனை கைது செய்த போலீசார் சோபனாவையும் கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த விக்னேஷையும் கைது செய்துள்ளனர் போலீசார். புதைக்கப்பட்ட அன்பழகனின் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.