முதல்வர் வாகனத்தின் குறுக்கே ஓடிய தொண்டர்...குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற பாதுகாவலர்கள்..!
தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் த.வெ.க வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொள்ள தாராபுரத்திற்கு வருகை தந்தார்.
விஜய் தனது வேனில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தொண்டர் ஒருவர் வாகனத்தின் முன்பு ஓடிச் சென்றார். அவரை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
திடீரென முதல்வர் வாகனத்தின் குறுக்கே ஓடிய தொண்டர்...குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற பாதுகாவலர்கள்#TVK | #CMVijay | #Dharapuram | #ByElection | #CMCampaign pic.twitter.com/mZD1Sx0jG4
— PttvOnlinenews (@PttvNewsX) September 30, 2026
தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெறும் இந்த சாலைவலத்தில் முதல்வர் விஜய் பொதுமக்களை சந்தித்து, தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு அளிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கிறார். இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜயின் சாலைவலம் மற்றும் வாக்கு சேகரிப்பு தாராபுரம் தொகுதியில் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் சென்று கொண்டிருந்தபோது, வழிநெடுகிலும் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர் ஒருவர் விஜயை நோக்கி ரோஜா பூங்கொத்தை தூக்கி வீசினார். அதை கவனித்த விஜய், அந்தப் பூங்கொத்தை லாவகமாக கேட்ச் பிடித்து பெற்றுக்கொண்டார். இந்தக் காட்சியைப் பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.
கையசைத்தபடியே வந்த போது திடீரென பறந்து வந்த ரோஜாவை கேஷுவலாக கேட்ச் பிடித்த முதலமைச்சர் விஜய்..!#Dharapuram | #CMVijay | #TVK | #TamilagaVettriKazhagam | #DharapuramByElection | #Sathyabama | #PolimerNews pic.twitter.com/xAb7hciyWx
— Polimer News (@polimernews) September 30, 2026