☰
×

நள்ளிரவு 2:30 மணிக்கு வந்த அந்த வீடியோ கால்... கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா (வயது 28). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், கணவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அதேவேளை, அர்ச்சனாவுக்கு அதே ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் உத்தரகாண்ட்டை சேர்ந்த விமலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அர்ச்சனாவும், விமலும் லிவ் இன் முறையில் வாழ்ந்துள்ளனர். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விமலிடம் அர்ச்சனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், விமல் அதற்கு சரியான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அர்ச்சனா இன்று அதிகாலை 2.30 மணியளவில் விமலுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று விமலிடம் அர்ச்சனா கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விமல் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு அர்ச்சனா வீட்டிற்கு சென்றுள்ளார். உடனடியாக விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அர்ச்சனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.