×

யாருமா நீ..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு அலப்பறை செய்த தவெக மகளிரணித் தலைமை

 

 

தவெக மகளிர் அணி தலைமை என்ற பெயரில் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு செய்வதுபோல் ரிலீஸ்  பதிவிடுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.


தேனி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருப்பவர் அஜிதா தெய்வேந்திரன். இவர் தன்னை தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைமை என கூறி அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளை சந்தித்து வருவது சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியருடன் சந்தித்து கோரிக்கைகளை  வலியுறுத்தும் விதமாக ரீல்ஸ் பதிவிடுவது, மகளிர் குழு சந்திப்பு, விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதனையும் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித்தா தெய்வேந்திரன். குறிப்பாக தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைமை என்று தன்னை குறிப்பிட்டு விவசாயிகள் மற்றும் மகளிர் குழுக்களின் கோரிக்கைகள் கேட்டறிந்ததாக தவெக  தலைமையை டேக் செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் மேலும் தேனி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏக்களின் ஆய்வின் போது அவர்களுடன் சென்று ஆய்வு செய்தது போல் அதையும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர்குழுக்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடந்த 2025 ஆம் ஆண்டு தேனி வடக்கு மாவட்ட மகளிர்அணி தலைமை அஜிதா தெய்வேந்திரன் அவர்களால் மனு அன்றைய மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. அந்த மனுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு இன்றைய மாவட்ட ஆட்சியர் pic.twitter.com/hpbWuNdUbm

— Ajitha Deivendran (@ajitemp24) May 24, 2026


இது போன்று அரசு அலுவலகங்களுக்கு சென்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது சர்ச்சையாகி உள்ள நிலையில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி என்று அதிகாரப்பூர்வமாக யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் மாவட்ட மகளிர் அணி என்ற பெயரில் அரசு அலுவலகங்களையும் தனியார் அலுவலகங்களில் அணுக கூடாது கட்சியின் பெயர் மற்றும் பொறுப்புகளை தவறாக பயன்படுத்துவது விதிமீறலாகும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார் . தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதி இல்லாத தமிழக வெற்றிக்கழக கட்சியினர் அரசு அலுவலகங்களுக்குள் சென்று ஆய்வு நடத்துவது என புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் நிலையில் தேனியிலும் இதுபோன்று  சர்ச்சை கிளம்பியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.