தமிழக மீனவர்கள் 17 பேர் சிங்களப் படையினரால் கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக மீட்க வேண்டும்!
Dec 7, 2023, 12:44 IST
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் அவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.