நவ. 15 அன்று அறிவிக்கப்பட்ட ரயில் மாற்றங்கள் ரத்து- அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும்
நவம்பர் 15 அன்று அறிவிக்கப்பட்ட ரயில் மாற்றங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு - கரூர் மார்க்கத்தில் நடைபெறவிருந்த தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் (Track Maintenance) தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், நாளை மறுநாள் (நவம்பர் 15, 2026) குறிப்பிட்ட ரயில்களில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரத்து மற்றும் குறுக்கப்பட்ட சேவைகளைத் தெற்கு ரயில்வே தற்போது திரும்பப் பெற்றுள்ளது. எனவே, கீழ்க்கண்ட 3 ரயில்களும் நவம்பர் 15 அன்று எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல் அதன் முழுப் பாதையிலும் இயங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது:
மாற்றங்கள் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:
* செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் (16846): கரூரில் பயணம் முடிக்கப்படாது (No Short Termination). வழக்கம் போல் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு ஈரோடு வரை முழுமையாகச் செல்லும்.
* ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16845): கொடுமுடி ரயில் நிலையத்தில் தாமதமாக நிறுத்தி வைக்கப்படாது (Not Regulated). ஈரோட்டிலிருந்து உரிய நேரத்தில் புறப்பட்டு வழக்கம் போல் இயங்கும்.
* திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843): கரூரில் பயணம் முடிக்கப்படாது. வழக்கம் போல் திருச்சியிலிருந்து புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை முழுமையாகச் செல்லும்.