சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியானது…!
ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கி, புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள இந்தத் தமிழ்த் தொடர், ஆகஸ்ட் 7 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆக.7-ல் வெளியாகும் என்று பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.இந்த வெப்-சீரிஸில் சசிகுமார், மூசா ரஸா என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வதந்தி சீசன் 2 – வின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.