×

'தாய்கிழவி' ட்ரெய்லர் வெளியானது!

 
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.
இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியானது. ட்ரெய்லரை பார்க்கும் போது படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் நிச்சயமாக அனைத்து ரசிகர்களையும் கவர வாய்ப்புள்ளது.
<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/BCQwSlYlEe8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BCQwSlYlEe8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">