கால் விரல்களும் போச்சு...மருந்து வாங்க கூட காசு இல்ல...பொண்டாட்டி, புள்ளகுட்டி இருந்திருந்தா..." - பாவா லட்சுமணன் வருத்தம்..!
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவரின் நகைச்சுவைக்கு பலத்த வரவேற்பு உள்ளது. இவர் வடிவேலுடன் செய்யும் காமெடி அனைத்தும் சூப்பர். உதாரணத்திற்கு இவரும் வடிவேலும் நடித்த மாயி படத்தின் காமெடி வேற லெவல் என்றே சொல்லலாம்.'வாம்மா... மின்னல்' என்று இவர் அடிக்கும் காமெடி இன்றும் பலரின் பேவரிட் என்றே சொல்லலாம்.
அடுத்து, யாருக்காவது ஜாமின் கிடைக்கவில்லை என்றால்கூட 'வாளமீன் இருக்குங்குறாங்க வஞ்சிர மீன் இருக்குங்குறாங்க. ஆனா, ஜாமீன் மட்டும் இல்லைங்குறாங்க' என்கிற இவரது காமெடியைத்தான் மீம்ஸாக நெட்டிசன்கள் வைரலாக்குவார்கள். அப்படிப்பட்ட நடிகர் தற்போது, நீரிழிவு நோயினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்.
உடல்நலப் பிரச்சினையின் காரணமாக அவரது கால் விரல்களில் சில அகற்றப்பட்டதாகவும், இதன் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அளித்த உருக்கமான பேட்டியில், ஒரு விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் தன்னால் நடக்க முடியாது என்ற வதந்தி திரைப்படத் துறையில் பரவியதால் வாய்ப்புகள் குறைந்ததாகவும் பாவா லட்சுமணன் கூறியிருந்தார். தற்போது நிரந்தரமாக தங்குவதற்கு வீடு கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் உதவிக்கரம் நீட்டத் தொடங்கினர். அதில் முக்கியமாக, லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பது திரையுலகில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட இந்த தொகை, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனுக்கு உடனடி உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் குடும்பத்தை பற்றி அவர் பேசும் போது "எனக்குத் திருமணமே ஆகவில்லை; ஒருவேளை மனைவி, பிள்ளைகள் என்று குடும்பம் இருந்திருந்தால் நான் ஏன் மற்றவர்களிடம் கையேந்தி உதவி கேட்க போறேன்? எனக்கு இருக்கும் ஒரேயொரு அக்காவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதியுடன் இல்லை என்பதால் தான், வேறு வழியின்றி திரைத்துறையை சேர்ந்தவர்கள் எனக்கு ஏதாவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்" எனத் தனது தற்போதைய வறுமை நிலை மற்றும் தனிமையை குறித்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பாவா லட்சுமணனுக்கு உதவிய லெஜன்ட் சரவணன் 👏👏👏❤️ pic.twitter.com/VTdwmM1Bf3
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 22, 2026
பாவா லட்சுமணனுக்கு உதவிய லெஜன்ட் சரவணன் 👏👏👏❤️ pic.twitter.com/VTdwmM1Bf3
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 22, 2026