×

ரவுடியையே சாய்த்த கள்ளக்காதலி! பயத்தில் தற்கொலை

 

திருவள்ளூரில் கள்ளக்காதலி கொடுத்த புகாரில் கைதாகி விடுவோம் என பயந்துபோன ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வந்த சரவணனுக்கு திருமணம் ஆகி சுமித்ரா தேவி என்ற மனைவி உள்ள நிலையில் இவன் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் திருவள்ளூர் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மப்பேடு, கடம்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேவிக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கள்ளக்காதலி தேவியின் மகள்களிடமும் சரவணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுவே இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதாக தேவி புகார் அளித்த நிலையில் அந்த வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவி ஆவடி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில் பணி முடிந்து வரும் போது தேவியிடம் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் இந்த வழக்கில் கடந்த சில தினங்களாக சரவணன் தேடப்பட்டு வந்த நிலையில் பெரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் கைதாகி விடுவோமோ என பயந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பார்த்த மக்கள் திருவள்ளூர் டவுன் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சரவணன் மனைவி சுமித்ரா தேவி டவுன் போலீசில் கொடுத்த புகாரில்,  தனது கணவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் தேவியுடன் உள்ள இளையராஜா, குமரன் ஆகிய மூன்று பேரும் தனது கணவரிடம் நகை பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் இதனால்  மன உளைச்சலில் கணவர் சரவணன் இருந்ததாகவும் இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 16 வழக்குகள் உள்ள குற்றவாளி கள்ளக்காதலி அளித்த புகாருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.