லெஜண்ட் சரவணன் நடித்துள்ள `லீடர்' பட டீசர் வெளியானது!
'லெஜெண்ட்' சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்தனர்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘லீடர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
“நிழல் உலகத்துக்கும் போலீஸுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எப்படி காப்பாற்றி, தப்பிக்கிறான் என்பதுதான் லீடர். மாஸ், ஆக் ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருக்கின்றன” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தனது மகளுடன் வாழ்வதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என லெஜண்ட் சரவணன் சொல்லும் காட்சியில் இருந்து அந்த ட்ரைன் ஃபைட் எல்லாம் வேறலெவல். மேலும், ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து தரமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், லீடர் டீசர் படம் பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையை விதைக்கிறது. துரை செந்தில்குமார் மற்றும் லெஜண்ட் சரவணன் இருவருமே போட்டுள்ள உழைப்பு தெளிவாக தெரிகிறது.வரும் ஏப்ரல் 30ம் தேதி தனுஷின் 'கர' படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், லெஜண்ட் சரவணனின் 'லீடர்' படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.