×

கொரோனா பரவலுக்குக் காரணமான டாஸ்மாக்கை மூட வேண்டும்! – தி.மு.க இளைஞரணி வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்குக் காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி 40வது ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க இளைஞரணியின் 40வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்று நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் வீடியோ கால் முறையில் நடந்தது. செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், “கொரோனா தமிழகத்தில் காட்டுத்தீயாகப் பரவி உயிர்களைப் பலி வாங்கி
 

தமிழகத்தில் கொரோனா பரவலுக்குக் காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி 40வது ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க இளைஞரணியின் 40வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்று

நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் வீடியோ கால் முறையில் நடந்தது. செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், “கொரோனா தமிழகத்தில் காட்டுத்தீயாகப் பரவி உயிர்களைப் பலி வாங்கி வரும் வேலையில், நோய்ப்பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் கல்வியில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிமிலேயர் வரம்புக்கு சம்பளத்தை அளவீடாக எதிர்க்க கண்டனம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கத் தடை விதிக்க வேண்டும், எட்டு வழிச்சாலைத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்,