வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு தரும் தமிழக அரசு!
தமிழகத்தில் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை, எளிய மக்கள், விதவைகள், கூலி தொழிலாளர்கள், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) மூலம் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது அரசாங்கமே இடத்தை வாங்கி, அரசாங்கமே வீடுகளை கட்டி, குறைந்த விலையில் அல்லது வாடகைக்கு மக்களுக்கு கொடுக்கும் திட்டம். இதற்காகத்தான் இப்போது கட்டடக்கலை ஆலோசகர்கள் (Architectural Consultant) தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது.
எங்கெல்லாம் வீடு கட்டப்படுகிறது?
1. புரசைவாக்கம் பகுதியில் - 5.53 ஏக்கரில் 300 குடியிருப்புகள்
சென்னை மாவட்டம் புரசைவாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 5.53 ஏக்கர் நிலத்தில் சுமார் *300 குடியிருப்புகளை கொண்ட உயர்தர கட்டட குடியிருப்பு திட்டம். நகரத்தின் மையப்பகுதியில் இருப்பதால் வீடு இல்லாத நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
2. நெற்குன்றம் பகுதியில் - 3.35 ஏக்கரில் 228 பன்னடுக்கு குடியிருப்புகள்
சென்னை மாவட்டம், நெற்குன்றம் பகுதியில் 3.35 ஏக்கர் நிலத்தில் *228 பன்னடுக்கு குடியிருப்புகள். அடுக்குமாடி கட்டிடமாக கட்டப்படுவதால் நிறைய குடும்பங்களுக்கு வீடு கிடைக்கும்.
3. திருவள்ளூர் - கூத்தம்பாக்கம் பகுதியில் - 1.20 ஏக்கரில் 112 வீடுகள்!
திருவள்ளூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் பகுதியில் 1.20 ஏக்கரில் 112 பன்னடுக்கு குடியிருப்புகள்.புறநகர் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு இது.
4. ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் - 76 வாடகை குடியிருப்புகள் (TNGRHS திட்டம்)
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு வளாகத்தில், TNGRHS திட்டத்தின் கீழ் 76 வாடகை குடியிருப்பு வீடுகள். இது அரசு ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும் திட்டம்.
5. அமைந்தகரை / திருவள்ளூர் பகுதியில் - 149 + 66 EWS வீடுகள்
சென்னை மாவட்டம் அமைந்தகரை, தரம்பாக்கம், சோழம்பேடு கிராமம், அண்ணாநகர் பகுதிகளில் *சொந்தமான 149 EWS (Economically Weaker Section) + 66 EWS வீடுகளை கட்டும் திட்டம்.* இது முழுக்க முழுக்க ஏழைகளுக்கான வீடு, விதவைகளுக்கான வீடு.
இதுக்கு ஆலோசகர் ஏன் தேவை?
- வீடுகளை வலுவாக, பாதுகாப்பாக கட்ட வேண்டும்
- குறைந்த செலவில் நிறைய வீடுகளை கட்ட வேண்டும்
- தண்ணீர் வசதி, மின்சாரம், கழிப்பறை என அனைத்து வசதிகளுடன் கட்ட வேண்டும்
- இதற்காக தகுதியான ஆலோசகர்களை தேர்வு செய்ய போகிறது.
அரசாங்கம் மக்களுக்காக நிறைய வீடுகளை கட்டி கொடுக்க போகிறது.இதற்கு ஆலோசகர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அதே நேரம் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, விதவைகளுக்கு சொந்த வீடு கிடைக்க போவது மிகப்பெரிய நம்பிக்கை!