சொந்த ஊரிலேயே தமிழக அரசின் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தின் கீழ்(TNHSRP) பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் TRAUMA REGISTRY செவிலியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 27.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் ஒரு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. செவிலியர் பணிக்கு செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு/அடிப்படை கணினி அறிவினை பெற்றிருக்க வேண்டும்.
செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.08.2026-இன்படி, 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 11 மாத ஒப்பந்த முடிவு அல்லது திட்ட செயலாக்க முடிவு இதில் எது முன்னதோ அதுவரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- மருத்துவமனைக் குழுவின் தலைவரின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பம் .
- விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- பிறந்த நாளுக்கான ஆதாரம் (பிறப்புச் சான்றிதழ்/ பத்தாம் வகுப்பு சான்றிதழ்/ பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்)
- கல்வித்தகுதிக்கான சான்றுகள் (பத்தாம் வகுப்பு சான்றிதழ்/ பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் )
- செவிலியர் பட்டயச் சான்று/ பட்டச்சான்று மற்றும் மதிப்பெண் சான்றுகள்.etc
- இருப்பிடத்திற்கான சான்றுகள்.
- ஆதார் அட்டை (அல்லது) தற்போது வருவாய்த் துறையிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
முக்கிய குறிப்பு
- விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்ப படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமை அடையாத விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.