×

இவர்களை கட்டாயம் கல்லூரிக்கு வரவழைக்க கூடாது … தமிழக அரசு உத்தரவு!

கொரோனா சூழலில் கல்லூரிக்கு வர ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மூன்றாவது நாளாக நேற்றும் 5 ஆயிரத்தை தாண்டியது. சுமார் 15,830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று கொரோனா சிகிச்சை பலனின்றி 77 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,728ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும்
 

கொரோனா சூழலில் கல்லூரிக்கு வர ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மூன்றாவது நாளாக நேற்றும் 5 ஆயிரத்தை தாண்டியது. சுமார் 15,830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று கொரோனா சிகிச்சை பலனின்றி 77 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,728ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வர வழைக் க கூடாது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவேற்பதாக புகார் எழுந்த நிலையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கலை, அறிவியல் கல்லூரியில் நிர்வாகிகளுக்கும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பதால் ஆன்லைன் வகுப்புகள் வீட்டிலிருந்தபடியே நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.NAAC சார்ந்த பணிகள் மற்றும் கல்லூரி சார்ந்த பணிகளுக்காகவும் ஆசிரியர்களை வரவழைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.