இன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!
Sep 11, 2026, 05:50 IST
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளதால், மாநாட்டுக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான நீதிமன்றப் பணிகள் நடைபெறாது.
செப்டம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்திற்கு முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.