விசில் ஊதி நடனமாடிய மாணவி - மேடையேறி பிடுங்கிய தேர்தல் அதிகாரி
கோவையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளின் விசில் பறிக்கப்பட்டது.
கோவையில் உள்ள தனியார் ( நிர்மலா ) கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடம் இருந்து விசில் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாநகராட்சி பள்ளி மாணவிகள் கழுத்தில் விசில் அணிந்து, விசில் ஊதியபடி கோலாட்டம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
இதற்கிடையில், மாணவிகள் அணிந்திருந்த விசில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கட்சியின் சின்னத்தை ஒத்ததாக இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் உடனடியாக மாணவிகள் கழுத்தில் இருந்த விசில்களை பறித்தனர். மாணவிகள் நடனம் ஆடிக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அங்கு சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் நிலைமை சீராகி, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.