☰
×

"ரிசார்ட் வாசலில் கேட்ட அலறல் சத்தம்!" - ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணைக் கண்டு பதறிய கூட்டம்!

 

கேரளாவின் பத்தனம்திட்டா அருகே கோழஞ்சேரியில் உள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த தின்ஷா (20), இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பரான ஜித்து, காதல் தோல்வியால் இந்த கொலையைச் செய்துள்ளார். ரிசார்ட்டிற்கு வந்த ஜித்து, தின்ஷாவை வெளியே அழைத்து 15 நிமிடங்கள் பேசிய பிறகு, மறைத்து வைத்திருந்த கத்தியால் 5 முறை குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்கள் தின்ஷாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்தார். ஜித்துவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்த 20 வயது இளம் பெண், அவரது நண்பரால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் குளத்துப்புழையைச் சேர்ந்த தின்ஷா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கோழஞ்சேரி மாராமண்ணில் இயங்கி வரும் ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் (Receptionist) பணியாற்றி வந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தின்ஷாவின் நண்பரான கீழ்ஊகரையைச் சேர்ந்த ஜித்து என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மாராமண் ரிசார்ட்டில் இன்று மதியம் இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தின்ஷா காதலிலிருந்து பின்வாங்கியதால் ஆத்திரமடைந்த ஜித்து, பழிவாங்கும் நோக்கில் அவரைக் கொல்ல முடிவு செய்து கத்தியுடன் ரிசார்ட்டிற்கு வந்துள்ளார்.

ரிசார்ட்டிற்கு வந்த ஜித்து, மிகவும் அமைதியான முறையில் வரவேற்பறைக்குச் சென்று தின்ஷாவை வெளியே பேசுவதற்காக அழைத்துள்ளார். சில நிமிடங்கள் இருவரும் வெளியே பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தின்ஷாவின் கழுத்தில் அடுத்தடுத்து 6 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்களும் பொதுமக்களும் பலத்த காயமடைந்த தின்ஷாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தின்ஷா இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்த ரிசார்ட்டில் வேலையில் சேர்ந்துள்ளார். "அந்த நபர் தின்ஷாவைத் தாக்கத்தான் வந்தான் என்பதை எங்களால் ஊகிக்கவே முடியவில்லை. வரவேற்பறைக்கு வந்தபோது அவர் மிகவும் இயல்பாகவும் கூலாகவும்தான் தின்ஷாவிடம் பேசினார்" என்று ரிசார்ட் ஊழியர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். கொலை செய்த பிறகு தப்பியோட முயன்ற ஜித்துவை, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அருகில் இருந்த மரத்தில் கட்டிப்போட்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயிப்ரம் போலீசார் குற்றவாளி ஜித்துவை மீட்டு கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்காக அவரை கோழஞ்சேரி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, தான் செய்த கொடூரச் செயலுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர் காணப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோயிப்ரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.