×

ஓரணியில் தமிழ்நாடு நிலவரம்- மருத்துவமனையில் இருந்தவாறே மு.க.ஸ்டாலின் ஆய்வு

 

ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஓரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை கடந்த 3-ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த பரப்புரையில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசி, வாக்காளர் அட்டை விவரங்களை பெற்றுக்கொண்டு செல்போன் எண் மற்றும் ஓடிபி மூலம் உறுப்பினர்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 8 மண்டலப் பொறுப்பாளர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்