×

ரயில்வே பாலத்தில் பக்கவாட்டு சுவர் இடிந்தது..

 

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே நுழைவு மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கீழே யாரும் இல்லாத காரணத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக அந்தப்பாலத்தின் கீழ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேறு பகுதியில் போலீசார் மாற்றி விட்டுள்ளனர்.

இந்நிலையில், இடிந்து விழுந்த நுழைவு பால சுவர் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இடிந்து விழுந்த கார்ன்கீரிட் பாலத்தில் தற்காலிக இரும்பு தாங்கிகள் பொருத்தப்பட்டு அந்த பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு - கரூர் மார்க்கத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேவேளை, அந்த பாலம் வழியாக சாலைப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.