×

‘ரஜினிக்கு காய்ச்சல் என பரவும் தகவல் உண்மையில்லை’ – பிஆர்ஓ ரியாஸ் தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அவருடைய செய்தியாளர்கள் சந்திப்பும் அதனை உறுதிப்படுத்தின. அதனால் அவர் இந்த ஆண்டு நிச்சயம் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அண்மையில் ரஜினி எழுதியது போல கடிதம் ஒன்று வெளியானது. அந்த கடிதத்தில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக அரசியல் பிரவேசம் வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம்
 

நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அவருடைய செய்தியாளர்கள் சந்திப்பும் அதனை உறுதிப்படுத்தின. அதனால் அவர் இந்த ஆண்டு நிச்சயம் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அண்மையில் ரஜினி எழுதியது போல கடிதம் ஒன்று வெளியானது.

அந்த கடிதத்தில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக அரசியல் பிரவேசம் வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம் குறித்து விளக்கம் அளித்த ரஜினி, அந்த கடிதத்தை தான் எழுதவில்லை என்றும் கடிதத்தில் இருந்தது உண்மை தான் என்றும் கூறியிருந்தார். மேலும், அரசியல் நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான் ரஜினிக்கு காய்ச்சல் என்றும் பண்ணை வீட்டில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இணையதளத்தில் வதந்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ், அவருக்கு காய்ச்சல் என வெளியான தகவல் வதந்தி என்றும் விஷமிகள் யாரோ இப்படி வதந்தி கிளப்பிவிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.