பட்ஜெட் இலச்சினையில் தொடரும் 'ரூ' குறியீடு..!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை டாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில், அதுதொடர்பான லோகோ வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 என்றும், ”ரூ” என்ற குறியீடும் இடம்பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீட்டுக்குப் பதிலாக கடந்த ஆண்டு தமிழ் எழுத்தான 'ரூ' என மாற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அது தொடர்கிறது.
மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களின் நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீடான ₹ என்பது இடம் பெற்றிருக்கும் நிலையில் கடந்த 2024-2025 தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையின் இலச்சினையிலும் இந்த குறியீடு இடம் பெற்றிருந்தது.
ஆனால், 2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ் எழுத்தான 'ரூ' என்பது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.