டாலர் உயர்வு... ரூபாய் சரிவு! கடந்த 10 நாட்களில் தாறுமாறாக மாறிய தங்கம் விலை: இன்று என்ன நிலை தெரியுமா?
ஒரு வருடத்திற்கு தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியையும் 15 விழுக்காடாக மத்திய அரசு அதிகரித்தது. இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாக தங்கம் பார்க்கப்பட்டாலும், வெளிநாடுகளில் இருந்து மட்டுமே 80 விழுக்காடு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
மற்றொருபுறம், உலக நாடுகளிடையேயான வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்திருக்கிறது.
இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று விற்கப்பட்ட அதே விலையான ஒரு சவரன் 1,18,000 ரூபாய் என்ற விலையிலேயே இன்றும் தங்கம் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாத நிலையிலும், வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று (மே 18) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,750 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,18,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மாறவில்லை.
கடந்த 10 நாட்களில் விலை!
மே 18 - ரூ. 1,18,000
மே 17 - ரூ. 1,18,000
மே 16 - ரூ. 1,18,000
மே 15 - ரூ. 1,18,120
மே 14 - ரூ. 1,20,400
மே 13 - ரூ. 1,23,200
மே 12 - ரூ. 1,14,640
மே 11 - ரூ. 1,12,800
மே 10 - ரூ. 1,13,200
மே 9 - ரூ. 1,13,200