☰
×

திமுக இவ்வளவு ஜெயிக்க முடிந்ததற்கு காரணம் எஸ்ஐஆர்தான் - அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!

 

மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:

எஸ்ஐஆர் பணியில் தவறு நடந்துள்ளது என்று முதல் முறை சொன்னது தமிழக வெற்றி கழகம் தான். எஸ்ஐஆருக்கு எதிராக, முதலில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எஸ்ஐஆர் பணி மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், நாங்கள் 170, 180 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று இருப்போம்.

எஸ்ஐஆர் பணியில் நடந்த தவறுகளால் தான் இவ்வளவு ஓட்டுகள் பாதிக்கப்பட்டது. திமுக இவ்வளவு ஜெயிக்க முடிந்ததற்கு காரணம் எஸ்ஐஆர்தான். வாக்காளர் பட்டியலில், திமுக என்ன குளறுபடி செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இல்லையென்றால் திமுக 20 தொகுதிகள் கூட ஜெயித்திருக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.