×

மின்கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு செலுத்தலாம்- தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு மின் ஊழியர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணத்தை எப்படி கணக்கிட்டு கட்டுவது என்ற குழப்பம் மக்களிடையே நீடித்துவருகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு இணையவழியில் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. சுயமாக மதிப்பிட்டு அதை போட்டோ
 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு மின் ஊழியர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணத்தை எப்படி கணக்கிட்டு கட்டுவது என்ற குழப்பம் மக்களிடையே நீடித்துவருகிறது.

இந்நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு இணையவழியில் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. சுயமாக மதிப்பிட்டு அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டுமெனவும் அதன்பின் மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் என்றும் மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.