மக்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்... உளுந்து விலை உயர வாய்ப்பு!
Jun 30, 2026, 16:19 IST
நாட்டில் நடப்பாண்டு உளுந்து சாகுபடி பரப்பு 40% குறைந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் 28 லட்சம் டன்னாக இருந்த உளுந்து உற்பத்தி, 2026ஆம் ஆண்டில் 22 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. எல் நினோ தாக்கத்தால் உளுந்து சாகுபடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உளுந்து பற்றாக்குறையை இறக்குமதி மூலம் ஈடுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். குறைந்தபட்ச ஆதார விலை ரூ.82 ஆக இருந்த நிலையில், இந்தூரில் உளுந்து கிலோ ரூ.92-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் உளுந்து விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக வறட்சி, மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி விலை மேலும் அதிகரிக்கும் என செய்தி வெளியானது குறிப்பிடதக்கது.