தாறுமாறாக உயர்ந்த வெள்ளி விலை...
Sep 27, 2025, 10:17 IST
சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 (இன்று)
26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400 (நேற்று)
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080
24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800
23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440