சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு!
Oct 20, 2023, 10:30 IST
அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஆனது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூபாய் 360 உயர்ந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 250 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து, ரூ.5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.