போர் சூழலால் எகிறும் சிலிண்டர் விலை! அத்தியாவசியப் பொருட்களும் உயரும் அபாயம்..!!
Jun 1, 2026, 10:05 IST
வீட்டு சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் இல்லை என்றாலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன்படி, இன்று ரூ. 46 உயர்ந்து, ரூ. 3283க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாதந்தோறும், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப வீட்டு உபயோகக் கேஸ் சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், மேற்காசியாவில் போர் சூழல் தணியாததால் இந்த மாதமும் உயர்ந்திருக்கிறது.
எரிபொருள் விலை தொடர் உயர்வை சந்தித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.