அன்று போலீஸ் அதிகாரி; இன்று.. தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியர்..!!
Jul 24, 2026, 14:21 IST
1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான சீமா அகர்வால் தமிழ்நாடு காவல்துறையில் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து திறமையாக பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த போது ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்துகிறார். இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கியுள்ளார். காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.