×

‘திட்டமிட்டபடி’ பிளஸ் 2 தேர்வு – முழுவீச்சில் பள்ளிக்கல்வித்துறை!!

பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி
 

பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வரும் மே 3ம் தேதி முதல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வு வழிகாட்டுதல் வெளியான நிலையில் பிளஸ் 2 தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகியுள்ளது.