×

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பமான நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் ஆரம்பமாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பொறியியல் கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்பிற்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.

அக்டோபர் 26 வரை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் எனவும் செய்முறை தேர்வு அக்டோபர் 18 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பானது, முதலாமாண்டு மாணவர்களை தவிர, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நடைபெறும் என்றும், மேலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.