ஆபீஸரே மிரண்டு போயிட்டாரு! - 10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்..!
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி. இவர் முதல் நபராக அலுவலகத்திற்கு நேற்று வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக, 'டிபாசிட்' தொகையான 10,000 ரூபாயை, பழைய நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மேஜை மேல் கொட்டினார்.
பத்து ரூபாய் நோட்டுகள் - 300,
20 ரூபாய் நோட்டுகள் - 225,
50 ரூபாயில் 20,
5 ரூபாய் நோட்டில் 100,
மேலும் 2 ரூபாய் நாணயங்கள் 500 என கொடுத்தார்.
இந்த சில்லறைகளை அதிகாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணி சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மனு தாக்கலுக்கு பின் கந்தசாமி கூறுகையில், ''பொதுமக்களுக்கு சேமிப்பு பழக்கமும், சில்லரையின் மதிப்பும் புரிய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தேர்தலுக்கும் இதை செய்கிறேன். ஐந்து ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்த தொகை இது. கடந்த 2006 முதல் பல தேர்தல்களில் போட்டியிடுகிறேன். இதுவரை 4 லட்சத்திற்கும் மேல் டிபாசிட் தொகையாக செலுத்தியுள்ளேன்,'' என்றார்.