×

‘வடகிழக்கு பருவமழை தொடங்கியது’ : கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நடப்பாண்டு சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நெல்லை, விருதுநக,ர் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவ மழையின் போது
 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நடப்பாண்டு சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நெல்லை, விருதுநக,ர் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவ மழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை பெறும். வடகிழக்கு பருவ மழையின் போது தமிழகத்தில் சராசரி மழை அளவு 4 சென்டிமீட்டர் ஆக இருக்கும். இந்த ஆண்டு மழை பதிவு சராசரி ஒட்டியோ அல்லது சராசரியை விட அதிகமாகவோ இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.