மக்களுக்கு அடுத்த ஷாக்..! சுங்கச் சாவடிகளில் 4 மடங்கு கட்டண வசூல்..!
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சரக்குப் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, லாரி, டம்ப்பர் அல்லது டிரெய்லர் போன்ற எந்தவொரு சரக்கு வாகனமும் அதன் கொள்ளளவை விட அதிகமாகச் சுமையை ஏற்றிச் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தைப் போல் நான்கு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதிகள் ஏப்ரல் 15 முதல் நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒரு வாகனம் அதன் கொள்ளளவை விட 10 சதவீதம் வரை அதிக சுமையை ஏற்றிச் சென்றால், அது கூடுதல் சுங்கக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஒரு வாகனம் அதன் கொள்ளளவை விட 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிக சுமையை ஏற்றிச் சென்றால், அது நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரியை விட இரு மடங்கு செலுத்த வேண்டும். மேலும், ஒரு வாகனம் அதன் கொள்ளளவை விட 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிக சுமையை ஏற்றிச் சென்றால் அது நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரியை விட நான்கு மடங்கு செலுத்த வேண்டும்.