மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஸ்மார்ட்போன்களின் விலை கிடுகிடு உயர்வு..!
ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சாம்சங், சியோமி நிறுவனங்கள் தங்கள் 41 மாடல் போன்களின் விலையை 18.75% வரை உயர்த்தி உள்ளன. இதில் சாம்சங்கின் 22 மாடல்களும், சியோமியின் 19 மாடல்களும் அடங்கும். இதன்படி, மாடல்களைப் பொறுத்து விலை ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மெமரி உதிரிபாகங்கள், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சாம்சங் தனது விலையை 3.13 சதவீதம் முதல் 9.52 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது, இதேபோல் சியோமி 4.26 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் விலையின் குறைந்தபட்ச அளவீடு 20000 ரூபாய் அளவீட்டை கடந்துள்ளது.இந்திய சந்தையில் பெரும் வர்த்தக சந்தை கொண்ச சாம்சங், சியோமி விலை உயர்வு முடிவை எடுத்திருக்கும் வேளையில், அடுத்த சில நாட்களில் அல்லது வாரத்தில் ஓப்போ, விவோ, ரியல்மி ஆகியவை தனது ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தும் என அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு, ஏற்கனவே மந்தமாக இருக்கும் ரீடைல் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைக்குக் கூடுதல் சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.